உள்நாடுபிராந்தியம்

விடுதி உரிமையாளரை கொலை செய்ய துப்பாக்கியுடன் வந்த நபர் கைது

வெலிகம பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் உரிமையாளரைக் கொலை செய்யும் நோக்குடன் பிரவேசித்த சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேல் மாகாணம் வடக்கு குற்றப்பிரிவுப் பணிப்பாளரின் தலைமையிலான குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து T-56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபர் தொடர்பில் மேல் மாகாணம் வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

குரங்கு அம்மை : தொற்று அபாயம் பற்றிய விழிப்புணர்வு

மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறு கோரிக்கை

பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கை