உள்நாடு

விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் – பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் இருவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், தலைக்கவசத்தாலும் தாக்கியுள்ளனர்.

தாக்குதல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளான நாத்தாண்டிய பகுதியை சேர்ந்த மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு சிரேஸ்ட மாணவர்களை கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து இரு மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்கள் தொடர்பிலும் தாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , தலைமறைவாகவுள்ள அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் மரணம்

editor

அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு – பிரபல வர்த்தகர் பலி.

கொரோனா பற்றிய போலித்தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணை