அரசியல்உள்நாடு

விஜித ஹேரத்தை சந்தித்தார் ஜூலி சங்

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று (02) சந்தித்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை அவரது புதிய பதவியில் சந்திக்க முடிந்துள்ளமை குறித்து மகிழ்;ச்சி அடைகின்றேன்.

அமெரிக்க இலங்கை கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பு,வர்த்தகம்,மனித உரிமைகளை உறுதி செய்தல் போன்ற பகிரப்பட்ட முன்னுரிமைகளில் இணைந்து செயற்படுவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.

தேசிய ஐக்கியம் ,நீதி மற்றும் வெளிப்படை தன்மை மிக்க ஆட்சி ஆகியவற்றில் இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவுவது குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.

Related posts

சுகாதார அமைச்சின் அறிவிப்பு

 சுதந்திர தினத்தில் சிசுவுக்கு நடந்த சோகம்

அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி!