சூடான செய்திகள் 1

விஜயகலாவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி மாதம் வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதம் 22ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்த இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு காணப்படும் வாய்ப்புகள் தொடர்பில் இதுவரை சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெறவில்லை என ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவிசாரணைப் பிரிவினர் இன்று நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

விடயங்களை கருத்திற் கொண்ட நீதவான் சட்டமா அதிபருக்கு குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்கு நினைவூட்டலொன்றை அனுப்புவதற்கு இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில்

editor

இன்று இரவும் ஊரடங்கு சட்டம்

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை