உள்நாடு

லண்டனிலிருந்து கட்டுநாயக்க வந்தடைந்த விசேட விமானம்

(UTV|கொழும்பு)- இலங்கை மாணவர்களுடன் விசேட விமானம் ஒன்று லண்டனிலிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த விமானத்தில் 194 பேர் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் சிக்குண்டிருந்தவர்களும் அவர்களில் அடங்குகின்றனர்.

நாட்டை வந்தடைந்துள்ள அனைவரும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திங்கள் முதல் முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள்

கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு

போதியளவு சமையல் எரிவாயு கையிருப்பில் – லிட்ரோவின் அறிவிப்பு