சூடான செய்திகள் 1

விசேட ரயில் சேவைகள் அமுலுக்கு

(UTVNEWS | COLOMBO) – கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் நீண்ட விடுமுறை நாட்களை கருத்திற் கொண்டு விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய இன்று(13) காலை 07.10 அளவில் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி விசேட ரயில் சேவை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

அதேபோல் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கியும் காலை 7.30 அளவில் ரயில் சேவை ஒன்று முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று(12) இரவு 7.35 க்கு கொழும்பில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று(13) அதிகாலை 4.43 க்கு பதுளையை சென்றடைந்துள்ளது.

அதேபோல் நேற்று(12) இரவு பதுளையில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று(13) அதிகாலை 05.26 க்கு புறக்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமிப்பு

இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தவும் – சபாநாயகர்

புதிய பாராளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது