சூடான செய்திகள் 1

விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நாளை முதல்

(UTV|COLOMBO)மழையுடனான காலநிலை தொடர்கின்ற நிலையில், நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்த இடங்களில் டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் அமுலாக்கப்படவுள்ளது.

Related posts

இன்று இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பம்

ரயில் பிரச்சினைகளை தீர்க்க இன்றும் விசேட பேச்சுவார்த்தை

தந்தையும் மகனும் சடலமாக கண்டெடுப்பு