உள்நாடு

விசேட அறிவிப்பை விடுத்த மத்திய வங்கி ஆளுநர்!

(UTV | கொழும்பு) –

இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்று எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அச்சந்தர்ப்பத்தில், ​​கடனை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது மட்டுமே இடம்பெற்றதாக அவர் ​தெரிவித்தார்.

நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடியாமல் போயிருந்தால், நெருக்கடி மேலும் உக்கிரமடைந்திருக்கும் என கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் எந்தவொரு அரசாங்கமும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அவசியம் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் – பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

editor

பட்டமளிப்பு நிகழ்வு குறித்து கொழும்பு பல்கலைக்கழகம் அறிக்கை

சம்பள உயர்வு தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை –  ரமேஷ் பத்திரண