உள்நாடு

விசா செல்லுபடியாகும் காலம் மேலும் 30 நாட்களுக்கு நீடிப்பு

(UTV|கொழும்பு) – இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களின் விசா செல்லுப்படியாகும் காலம் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் ஜீன் மாதம் 11ஆம் திகதி வரை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த மார்ச் மாதம் 07 ஆம் திகதிக்கும், எதிர்வரும் ஜுன் மாதம் 11 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், காலாவதியாகும் வீசாக்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

கனமழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் புதிய எச்சரிக்கை

editor

மதுபான சாலைகளுக்கு பூட்டு

மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை