சூடான செய்திகள் 1

விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது

(UTV|COLOMBO) சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சீதுவை, முலகலன்கமுவ பிரதேசத்தில் வைத்து செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர்  கைது  செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

28 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சாய்ந்தமருது குர்ஆன் மதரஸாவிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு : நிர்வாகி கைது- பதற்ற நிலை

கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நீதிமன்றில் ஆஜர்

பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இரத்து