சூடான செய்திகள் 1

விசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் இருந்த இருவர் கைது

(UTV|COLOMBO) விசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் இருவர் கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று(08) குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 மற்றும் 35 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சந்தேகநபர்களும் இன்று(09) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தொழில் நுட்ப மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன – மீண்டு கல்வி நடவடிக்கை 29ல்ஆரம்பம்…

பிரதமரின் செயலாளர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்