சூடான செய்திகள் 1

விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழு நியமனம்…

(UTV|COLOMBO)  நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் முதற்கட்ட விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரிடம் முன்வைத்த ​கோரிக்கைக்கு இணங்க மேலும் 6 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவில் 18 உத்தியோகத்தர்கள் அடங்குகின்றனர்.

அதேவேளை, ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

 

Related posts

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாது- பெருந்தோட்ட கம்பனிகள்

இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற அமர்வுகளை அதிகளவில் ஒத்திவைத்த ஜனாதிபதி

பிரதமர் பதவியை ஏற்காமல் பயந்து ஓடுவது நல்லதா? கெட்டதா?