உள்நாடு

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை கட்டடத்தில் தீப்பரவல்!

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை கட்டடம் ஒன்றில் இன்று (5) தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையின் பழைய எக்ஸ்ரே கட்டடத்தில் இந்த தீப்பரவல் இடம்பெற்றுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை நிருவாகம் எடுத்த முயற்சியில் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச சபை மற்றும் மட்டக்களப்பு தீயணைக்கும் படையினரின் ஒத்துழைப்புகளுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில், வைத்தியசாலை உபகரணங்கள் பல தீயில் எரிந்துள்ளன.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

அமைச்சரவையை கலைத்து, காபந்து அரசை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோாிக்கை

சுற்றுலாப்பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மன்னார், மாந்தை கிராம அமைப்புக்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைப்பு!