வகைப்படுத்தப்படாத

வானுட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பசிபிக் பெருங்கடலில் உள்ள வானுட்டு தீவில் 6.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் 47 கிலோமீட்டர் (29 மைல்) ஆழத்தில் தாக்கியது. இது ஒரு மேலோட்டமான பூகம்பமாக அமைந்தது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

வானுட்டு தீவுகள் பசிபிக் பெருங்கடலில் ‘ரிங் ஆப் பயர்’ என்ற பகுதியில் அமைந்துள்ளது.  இந்த பகுதிகளில் பெரிய பூகம்பங்களும், எரிமலை வெடிப்புகளும் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Water cut in Rajagiriya and several areas

கள்ளக் காதலி மீது துப்பாக்கிச் சூடு

மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து