வட்ஸ்அப் பயனர்களின் கணக்குகளுக்குள் ஊடுருவி, போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி பண மோசடி செய்யும் முயற்சிகள் குறித்து இந்த நாட்களில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் பதிவாவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மோசடி செய்பவர்கள் பயனர்களை ஏமாற்றி வட்ஸ்அப் OTP எண்களைப் பெற்று போலி செய்திகளை அனுப்பி மோசடி செய்து வருவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, இந்தப் பண மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
எந்தவொரு சூழ்நிலையிலும் ஒன்லைன் கணக்குகளுக்கான OTP எண்களை ஏனைய தரப்பினருக்கு வழங்கக்கூடாது என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.