உள்நாடு

வாசிம் தாஜுதீன் விவகாரம் – கஜ்ஜாவின் மகனிடம் வாக்குமூலம் பெற தயாராகும் சி.ஐ.டி

ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் உயிரிழக்கும் போது, ​​அவரது காரைப் பின்தொடர்ந்து சென்ற சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் கஜ்ஜா என்ற அனுர விதானகமகே இருந்ததாக கஜ்ஜாவின் மனைவி சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.

அந்த அதிகாரிகள் காட்டிய சிசிடிவி காட்சிகளில் சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை அவர் அடையாளம் கண்டார்.

இருப்பினும், கஜ்ஜாவின் 17 வயது மகன் பின்னர் ஊடகங்கள் முன் தோன்றி, தனது தாயின் வெளிப்படுத்தலை மறுத்து, அந்த வீடியோவை தனது தந்தையின் உறவினர்களுக்குக் காட்டி, இந்த விடயத்தை ஏன் விசாரிக்கவில்லை என்று பொலிஸாரிடம் கேட்டார்.

இருப்பினும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் காரைத் பின் தொடர்ந்த ஜீப்பில் பயணித்தவர் கஜ்ஜா என்கிற அனுர விதானகமகே என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது.

இந்த பின்னணியில் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் எதிர்காலத்தில் கஜ்ஜாவின் மகனிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் கஜ்ஜாவின் உறவினர்களிடமிருந்து வாக்குமூலங்கள் எடுக்கப்படும் என்றும், தாஜுதீனின் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் அவர்களுக்குக் காட்டப்படும் என்றும், அங்கு இருக்கும் மற்றொரு நபர் மித்தெனியவைச் சேர்ந்த கஜ்ஜாவா என்று கேட்டறிப்படவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

எமது நாட்டில் இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமில்லை – ஜனாதிபதி அநுர

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் இருவருக்கு விளக்கமறியல்!