வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (15) சனிக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தினை அடையாளங்காண முடியாமல் உருக்குலைந்திருப்பதனால் உறவினர்கள் மீன்பிடிக்கச்சென்றோ அல்லது வேறேதேனும் தேவைக்கோ வீட்டை விட்டுச்சென்று வீடு திரும்பாமலிருந்தாலோ உடனடியாக 0652057037 என்ற இலக்கத்தில் வாகரை பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
குறித்த
குறித்த சடலம் வாகரை பொலிஸாரினால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு அங்கு குளிரூட்டியில் வைக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
