அரசியல்உள்நாடு

வாகன பேரணியில் பங்கேற்க தயாராக இருந்த ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் 33 பேர் கைது

கண்டியில் உள்ள பாதஹேவாஹெட்ட தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணியில் பங்கேற்கத் தயாராக இருந்த 33 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பிட்டிய பகுதியில் இந்நடவடிக்கைக்காக தயார் நிலையில் வைத்திருந்த 8 வாகனங்களையும் கண்டி தலைமையக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வேட்பாளர்களின் உருவப்படங்கள் மற்றும் பல்வேறு கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தற்போது அவை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில்

அலுவலக ரயில்கள் 49 வழமையான அட்டவணை பிரகாரம் சேவையில்

கொரோனா சிகிச்சைக்காக நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை