கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட பல நகரங்களில் காற்றுத் தரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாகவும், இதற்கு வாகனப் புகையே முக்கிய காரணம் எனவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வாகனப் புகைப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களால் தவறுகள் நடக்கக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர், இந்தத் தவறுகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தற்போது, அரசாங்கம் திடீர் புகைப் பரிசோதனைகளை நடத்தி வருவதாகவும், காற்றுத் தரம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், போக்குவரத்து விளக்குகளின் நேர சமிக்ஞைகள் முறை (time countdown) இல்லாததால், வாகனங்கள் வேகமாகச் செல்வதாகவும், இதனால் காற்றுத் தரம் பாதிக்கப்படுவதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.