உள்நாடுபிராந்தியம்

வவுனியா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சை கூடச் செயற்பாடுகள் ஆரம்பம்

வவுனியா பொது வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இருதய சத்திர சிகிச்சை நிலையம் இன்றைய தினம் (18.09) தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.

நெதர்லாந்து அரசின் நிதி உதவியோடு இருதய சத்திர சிகிச்சை கூடம் அதற்கான உபகரணங்களோடு அமைக்கப்பட்டபோதிலும் பயன்பாடின்றி காணப்பட்டது.

இந் நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த இரு வருடங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்ட நிலையிலும் வைத்திய நிபுணர்கள் இன்மையால் குறித்த சத்திர சிகிச்சை கூடம் செயற்படாமல் இருந்தது.

இதன் காரணமாக வவுனியா மற்றும் அதனை அண்டிய பகுதி மக்கள் யாழ் ஆதார வைத்தியசாலை மற்றும் வேறு மாவட்டத்திற்கும் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் சுகாதார அமைச்சினால் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் தி. வைகுந்தன் நியமிக்கப்பட்டதன் பின்னர் குறித்த சத்திர சிகிச்சை கூடத்தினை ஆரம்பிப்பதற்கான முழுமையான பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதன் பிரகாரம் ஆளணி பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் கூட யாழ் மாவட்டத்தின் சிரேஸ்ட முன்னணி இருதய சத்திர சிகிச்சை நிபுணர் பி. லக்ஸ்மன், வவுனியா இருதய சத்திர சிகிச்சை நிபுணர் எஸ். ஆர். குமார மற்றும் ஏனைய வைத்தியர்கள், வைத்தியசாலை நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் குறித்த இருதய சத்திர சிகிச்சை கூடத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் சுமார் எட்டு வைத்தியசாலைகளிலேயே இருதய சத்திர சிகிச்சை பிரிவுகள் உள்ள நிலையில் வவுனியாவிலும் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளமை பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிகரிக்கப்படும் அதிபர்களுக்கான கொடுப்பனவு!

பாதுகாப்புப் படை பிரதானிகளுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு

editor

போதைக்கு அடிமையான தந்தை – திண்டாடும் ஆறு குழந்தைகள் [VIDEO]