உள்நாடுபிராந்தியம்

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்.

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  இன்று திங்கட்கிழமை (29) அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த வியாழக்கிழமை (25) வவுனியா பம்பைமடு பகுதியில் அஸ்வெசும திட்டத்திற்கான பெயர் பதிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வருகை தந்த பொதுமகன் ஒருவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியமைக்கு கண்டனம் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அரச உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பை வழங்கு, அவர்கள் தங்கள் கடமைகளை செய்ய விடு  போன்ற கோஷங்கள் எழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

O/L பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர்

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவுக்கு பிணை

editor

நாமல் எம்.பியின் திருமண நிகழ்விற்கான மின் கட்டண சர்ச்சை தொடர்பான வழக்கு விசாரணை

editor