உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

வவுனியா யாழ். வீதியில் வேன் மோதியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்து வவுனியா யாழ். வீதியில் புதிய பஸ் நிலையத்திற்கு அண்மையில் இன்று (04) காலை இடம்பெற்றது.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த வேன் வவுனியா யாழ். வீதியில் புதிய பஸ் நிலையம் முன்பாக சென்று கொண்டிருந்த போது வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது

editor

டயானாவுக்கு எதிரான வழக்கு நவம்பர் 4 இல் மீள விசாரணை

editor

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணம் 75% அதிகரித்துள்ளது!