வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தாக்கம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (11) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வௌியிடப்பட்டதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.