உள்நாடுகாலநிலை

வளிமண்டலத்தில் குழப்ப நிலை – அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் பலத்த மழை – வெளியான அவசர அறிவிப்பு

நாட்டின் கிழக்கு திசையில் கீழ் வளிமண்டலத்தில் குழப்ப நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று (13) மாலை விடுக்கப்பட்ட இந்த அறிக்கையின்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!

புதிய வருடத்தில் புதிய திட்டங்களுடன் நாட்டை பொருளாதார வெற்றியை நோக்கி இட்டுச்செல்வோம் – ஜனாதிபதி அநுர

editor

இராஜாங்கனை தபால் மூல வாக்களிப்பு இன்று