சூடான செய்திகள் 1

வர்த்தகரை கத்தியால் குத்திய கொள்ளையர்…

(UTV|COLOMBO)  தெஹிவளை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி குறித்த வர்த்தகர் ஓய்வு எடுக்கும் நோக்கில், தெஹிவளை மேம்பாலத்துக்கு அருகில் உள்ள தமது வர்த்தக நிலையத்தின் கதவினை பாதி திறந்துவைத்த நிலையில் உள்ளே அமர்ந்துள்ளார்.

அதன்போது பணத்தை கொள்ளையிட்டு செல்லும் நோக்கில் உட்பிரவேசித்த ஒருவர், அவரை கொலை செய்து தப்பிச் சென்றிருப்பதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொள்ளையிடும் நோக்கிலேயே அவர் உட்பிரவேசித்தார் என்று ஆரம்பவிசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான சீ.சீ.டி.வி காணொளி பதிவுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

 

 

Related posts

500 பாடசாலை கட்டடங்கள் ஒரே நாளில் இன்று மாணவர்களிடம் கையளிப்பு

காரணத்தினை வெளியிட்டார் விஜயகலா

கொழும்பில் 21 மணிநேர நீர்வெட்டு