வகைப்படுத்தப்படாத

வர்த்தகத்தில் முன்னுரிமை பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து ஜப்பானை தென்கொரியா நீக்கியது

(UTVNEWS | COLOMBO) – வர்த்தகத்தில் முன்னுரிமை பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து ஜப்பானை தென்கொரியா நீக்கியுள்ளது.

ஜப்பான் மற்றும் தென்கொரியா இடையே வர்த்தக ரீதியிலான பிரச்சினை நீடிக்கிறது. தென்கொரியாவின் வர்த்தகத்தைக் கீழிறக்க ஜப்பான் அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. இதனை கண்டித்து தென்கொரியாவில் ஜப்பானுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.

இந்த நிலையில் வர்த்தகத்தில் முன்னுரிமை பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து ஜப்பானை தென்கொரியா நீக்கியுள்ளது. இதுகுறித்து தென்கொரியாவின் வர்த்தக அமைச்சரான சங் யுன் மோ கூறுகையில் “எங்களது வர்த்தக முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 29 நாடுகளிலிருந்து ஜப்பானை நீக்குகிறோம். ஏற்றுமதிப் பொருட்களில் சர்வதேச வர்த்தக விதிமுறைகளை ஜப்பான் மீறியதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.

ஆனால், வர்த்தக முன்னுரிமைப் பட்டியலிலிருந்து ஜப்பான் நீக்கப்பட்டதற்கான முழுமையான விவரத்தை தென்கொரியா தெரிவிக்கவில்லை. ஜப்பானுக்கு எதிராக தென்கொரியா எடுத்துள்ள இந்த மாற்றங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Showers likely in evening or night

வயோதிப பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை

GET RID OF HUNGER BEFORE BUILDING GYMS – GEETHA KUMARASINGHE – [VIDEO]