உள்நாடு

வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்‌தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு, கடந்த ஆண்டை விட 18% அதிக வருமான இலக்கு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த வாரத்தில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் வரலாற்றில் பெறப்பட்ட அதிகபட்ச வருமான இலக்கான 2 ட்ரில்லியன் ரூபாவைத் தாண்டி வருமானம் ஈட்ட முடிந்தது.

இந்த நேரத்தில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2,080 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது என்றார்.

Related posts

போதைப்பொருள் விற்பனை : 13 அதிகாரிகளும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

பெக்கோ சமனின் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு

editor

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி – இரு பெண்கள் கைது

editor