2024 மற்றும் 2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025 செப்டெம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது.
தனிநபர்கள், பங்குடமை, கூட்டாண்மைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பிற நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
இலங்கை வங்கியின் எந்தக் கிளையிலும் அல்லது இணைய வழியினூடாகவும் செலுத்தலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 30ஆம் திகதிக்குப் பின்னர் செலுத்தப்படும் வரி, வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு உத்தரவு மூலம் தீர்க்கப்பட்டாலும் அது தாமதமான செலுத்துதல்கள் என்றுதான் கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரியை செலுத்தாமை, தாமதமாகக் செலுத்துதல் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வட்டி மற்றும் தண்டப்பணம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ மாட்டாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரியுறுத்தியுள்ளது.