அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு – 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் இன்று (25) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இன்று பி.ப 6.10க்கு இடம்பெற்ற இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவுசெலவுத்திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18ஆம் திகதி முதல் இன்று (25) வரை, 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.

இதற்கு அமைய குழு நிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 19 நாட்கள் இடம்பெறவுள்ளது.

இதற்கு அமைய 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Related posts

களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு 8 மணி வரை?

துறைமுகநகர சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற வியாக்கியானத்தை சபாநாயகர் அறிவித்தார்

பெரஹர உற்சவத்தை முன்னிட்டு, கடுவலை பகுதியில் போக்குவரத்து மட்டு