உள்நாடு

வரலாற்று தவறை செய்த சந்திரிக்கா

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் திரு மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்னிறுத்தியமை தனது வாழ்க்கையில் ஏற்பட்ட வரலாற்றுத் தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழிவுக்குக் காரணமானவர்கள் இருவர் என்றும், இருவரும் தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கியதாகவும், எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார் , அமைச்சர் நிமல் சிறிபாத சில்வா பதில் தலைவராக பதவியை வகிக்கும் இடத்தில், கட்சியை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை மன்ற கல்லூரியில் திங்கட்கிழமை (29​) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைத் தெரிவித்தார்

Related posts

இதுவரை 820 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

போக்குவரத்து திணைக்களம் தற்காலிகமாக மூடப்படுகிறது

இருபது : இன்று முதல் அமுலுக்கு