உள்நாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா குன்றை பௌர்ணமி இரவில் பார்வையிடலாம்

வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா குன்றை போயா பௌர்ணமி இரவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க சுற்றுலா அமைச்சு தீர்மானித்துள்ளது.

பௌர்ணமி தினத்தை இலக்காகக் கொண்டு மாதத்திற்கு ஐந்து நாட்கள் ‘நிலவில் சிகிரியா’ என்ற வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, சுற்றுலாப் பயணிகள் பௌர்ணமி தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன், பௌர்ணமி தினத்தன்று மற்றும் அதற்கு 2 நாட்களுக்குப் பின் என சீகிரியாவை இரவு நேரத்தில் பார்வையிட முடியும்.

சுற்றுலாத்துறையின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஒளடத வலயம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

பதில் பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு தொடர்பில் சட்டமா அதிபர் அதிருப்தி

மின்சார திருத்த சட்டமூலம் – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் அறிவித்தார்

editor