வன்னி மாவட்டத்தில் – இரு முறை எம்பி பதவியை முகாவுக்கு கிடைத்துள்ளது.
எதுவுமே வன்னி மக்களுக்கு செய்யாத போதும் – அந்த மக்கள் இரு முறை எம்பி பதவியை வழங்கினர்.
ஆனால், நீங்கள் – பொத்துவிலுக்கே அனைத்தையும் வழங்குகிறீர்கள். பொத்துவில் தவிசாளர் பதவி மற்றும் எம்பி பதவி என்று.
முசலி பிரதேச சபை தவிசாளர் பதவியை NPP பெற்றுள்ளது. அவர்களுக்கும் 2 ஆசனம் ; முகாவாகிய எமக்கும் 2 ஆசனம்.
ரிஷாத் பதியுதீனுடன் – சில பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தேன். அதன்படி செயற்பட்டிருந்தாலும் எமக்கும் ஒரு வருடமாவது தவிசாளர் பதவி கிடைத்திருக்கும். அதையும் தவிடு பொடியாக்கி ஆக்கிவிட்டீர்கள் என்று – முன்னாள் எம்பி – ஹூனைஸ் பாரூக் காரசாரமாக கருத்து வெளியிட்டபோதும் – ரவூப் ஹக்கீம் அமைதியாகவே இருந்தார். மாறாக – செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் எம்பியே பதில் வழங்கிக் கொண்டிருந்தாராம்.
ஹூனைஸ் பாரூக்குக்கு மட்டுமன்றி – ஏனையோரின் கருத்துக்களுக்கும் நிஸாம் காரியப்பரே பதில் வழங்கினாராம்.
இது – உயர்பீட உறுப்பினர்களை கடுமையாக கடுப்பேத்தியதாக அறிய முடிகிறது.
உயர்பீடக் கூட்டத்தின் முடிவில் – வெளியே வந்த பலர் கீழ்வரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இரானுவம் – புலிகளை எவ்வாறு முள்ளிவாய்க்கலுடன் சுருக்கி அழித்ததோ , அதேபோல் – முகாவும் பொத்துவிலுடன் சுருங்கி அழிந்து போகும்.
முகா தலைவர் ஹக்கீமா ? அல்லது நிஸாம் காரியப்பரா ?
என்றெல்லாம் தம் கட்சியையே ஏளனமாக பேசிக் கொண்டனராம்.
-Boomudeen