உள்நாடுபிராந்தியம்

வனாத்தவில்லுவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரநாயக்கபுர பகுதியில், புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வனாத்தவில்லு பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் வியாழக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், வனாத்தவில்லு, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

மைதிரியிடம் இன்றும் CIDயில் வாக்குமூலம்!

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து!

களனி பல்கலைக்கழக வேந்தர் காலமானார்