உள்நாடு

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியை நிராகரித்த டி. வி. சானக்க

(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக்கவுக்கு நேற்று (08) வழங்கப்பட்ட வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியை நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிப்பிரமாணம் செய்து ஒரு மணித்தியாலத்தில் ஜனாதிபதிக்கு இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி, மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி.சானக்கவிற்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்தவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சராக (08) காலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகர கடமைகளை முன்னெடுத்து வருகிறார்.

Related posts

ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானிய இளவரசி!

சமன் பெரேராவுக்கு விளக்கமறியல்

2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 800,000 கடந்தது

editor