வகைப்படுத்தப்படாத

வத்தளையில் கடைத் தொகுதி ஒன்று தீயில் எரிந்து சாம்பலானது

(UTV|GAMPAHA)-வத்தளை, ஹுனுப்பிட்டிய ஜயந்திமல் சந்தி பிரதேசத்தில் உள்ள வர்த்தக கட்டடத் தொகுதி ஒன்று இன்று காலை தீப்பிடித்து எரிந்துள்ளது.

தீப்பற்றல் காரணமாக அங்கிருந்த சுமார் 10 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

இன்று அதிகாலை 03.00 மணியளவில் குறித்த பிரதேசத்தில் இருக்கின்ற காய்கறிகள், பழங்கள் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற கடைகள் தீயினால் அழிவடைந்துள்ளன.

இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயலாக இருக்கலாம் என்று கடை உரிமையாளர்கள் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

கடந்த மாத இறுதிப்பகுதியில் இவை அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கடைகள் அகற்றப்படுமாக இருந்தால் நியாயமான தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் தீயிற்கான காரணத்தை கண்டறிவதற்காக கிரிபத்கொட பொலிஸாரினால் விஷேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Laos national arrested with ‘Ice’ worth over Rs. 40 million

மத நல்லிணக்கத்தை பாதுகாக்க புதிய சட்டம்?

Panadura North OIC interdicted over missing T-56 riflesP