வகைப்படுத்தப்படாத

வட மாகாண அமைச்சு வெற்றிடங்களை நிரப்ப இம்மாதம் 15 ம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

(UDHAYAM, COLOMBO) – வட மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களை பட்டதாரிகளைக்கொண்டு நிரப்ப எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள செயலாளர்களிடம் மாகாண அவைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்துடன், குறித்த நியமனங்கள் தொடர்பான விவரங்களை தமக்கு வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.

பட்டதாரிகள் நியமனம் என்பது பாரிய அளவில் மத்திய அரசை சார்ந்திருந்தாலும், இந்த விடயத்தில் மாகாண சபை நடவடிக்கை எடுப்பது அவசியாமாகும் என்றும் அவைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடமாகாண அமைச்சுக்கள், திணைகளங்களில் உள்ள வெற்றிடங்களை பட்டதாரிகளை கொண்டு நிரப்புவது குறித்து ஆராய்வதற்காக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை சந்திக்க வடமாகாணசபை உறுப்பினர்களும் பட்டதாரிகளும் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 13 ஆம் திகதி இந்த சந்திப்பை நடத்த தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Cabinet opposes implementing death penalty

Teachers & Principals fall sick for two days

இலங்கையில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு!