டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு வடமேல் மாகாண சபை ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளமான 12,249,222 ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
அதன்படி, வடமேல் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் வசந்த குணசேகர, நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இதற்கான காசோலையை கையளித்தார்.
வடமேல் மாகாண கமத்தொழில் அமைச்சின் செயலாளர் ஈ.எம்.எம்.எஸ். ஏகநாயக்க, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.பீ. குமாரசிங்க, வடமேல் மாகாண சபையின் கணக்காளர் அனுபமா அபேசிங்க, குளியாப்பிட்டி வலயக் கல்விப் பணிப்பாளர் பந்துலானி பஸ்நாயக்க, சமூக அபிவிருத்தி அதிகாரி அஜந்தா வீரசேகர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு
