சூடான செய்திகள் 1

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கிடு -அமைச்சர் ரிஷாட்

(UTVNEWS|COLOMBO) – வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு (14) அமைச்சர் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் கௌரவ அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் றிஷாட் மேலும் கூறியதாவது, வடக்கிலே இந்த நான்கு வருட காலத்தில் பிரதமரின் கீழான அமைச்சில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியினால் பாரிய அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுள்ளன அது மாத்திரமன்றி மக்களின் நலனுக்காக சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, மற்றும் இன்னோரன்ன துறைகளில் இந்த அரசாங்கம் நிதியை ஒதுக்கி அபிவிருத்தியை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் கல்வி தேவைக்காக கட்டப்பட்டுள்ள பாடசாலை கட்டிடங்கள் பல விரைவில் திறப்பற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கின் சுகாதார துறையை மேம்படுத்துவதற்காக அமைச்சர் ராஜித, இந்த பகுதிக்கு அடிக்கடி விஜயம் செய்கிறார். இதுவரை இருந்த சுகாதார அமைச்சர்களில் வடக்குக்கு ஆக கூடிய தடவை விஜயம் செய்த அமைச்சராக ராஜித விளங்குகிறார். வடக்கின் அபிவிருத்தியில் கரிசனை காட்டும் பிரதமருக்கும் அமைச்சர் ராஜிதவுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்

ஊடகப்பிரிவு

Related posts

வரி விகிதங்களை அதிகரிப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பில் ஊரடங்கு சட்டம்

மன்னார் பிரதேச சபையைக் கைப்பற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரலாறு படைத்தது.