சூடான செய்திகள் 1

வடக்கின் பிரபல த.தே.கூ உறுப்பினர் அநுரகுமாரவுக்கு வாழ்த்து

(UTVNEWS | COLOMBO) -ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க பொருத்தமானவர் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார போட்டியிடுவது தொடர்பில் மாவை சேனாதிராஜாவிடம் கேள்வி கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், கிராம மக்கள் மத்தியிலும், அறிஞர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் ஒரு புதிய குரலாக பரந்து உயர்ந்து வந்தவர்கள். அவர்களும் ஒரு காலத்தில் ஆயுதம் எடுத்து புரட்சி செய்து எத்தனையோ போராட்டங்கள் நடத்தியவர்கள். நாட்டைத் தாங்கள் ஆட்சி செய்ய வேண்டும், ஆயுதமெடுத்துப் போராடி ஆட்சி செய்ய வேண்டும் என தீர்மானித்துப் போராடி பலருடைய உயிர்களை இழந்தவர்கள். பல உயிர்களும் பறிகொடுக்கப்பட்டன.

இப்போது அவர்கள் ஜனநாயக ரீதியில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அநுரகுமார திஸாநாயக்க பொருத்தமானவர். அவருக்கு நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Related posts

ஜனாதிபதியினால் 38 சிரேஷ்ட இராணுவப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியினை வழங்க ரிஷாத் பதியுதீன் ஆதரவு

35 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் பறிமுதல்