தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மே, பெக்கோ சமன், தம்பரி லஹிரு, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் கொலை தொடர்பாக தற்போது பல உண்மைகள் வெளிப்பட்டு வருகின்றன.
இந்தக் குழு ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணைகளில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூர் அரசியலில் ஈடுபட்டிருந்த பியால் மனம்பேரி மற்றும் சம்பத் மனம்பேரி ஆகியோருக்குச் சொந்தமான மித்தெனியவில் உள்ள ஒரு காணியில் வெள்ளை நிறக் கட்டிகள் மற்றும் ஐஸ் கலந்த போதைப்பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
பியால் மனம்பேரி மற்றும் சம்பத் மனம்பேரி ஆகியோர் தற்போது காவலில் உள்ளனர்,
இதேவளை, சிறிது காலம் அந்தக் குழுவுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்த அருண விதானகமகே அல்லது மீகசரே கஜ்ஜா, பின்னர் அவர்களிடமிருந்து பிரிந்து சென்று அவர்கள் செய்த பல்வேறு குற்றங்கள் குறித்து பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டார் நிலையில் பெப்ரவரி 18 இல் கொலை செய்யப்பட்டார்.