உள்நாடுசூடான செய்திகள் 1

வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவை என்பன அத்தியாவசிய சேவை பிரிவுக்குள்

(UTV|கொழும்பு)- இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கி, திறைசேரி மற்றும் காப்புறுதி சேவை என்பன அத்தியாவசிய சேவை பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி, ஏனைய வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கிளைகள், திறைசேரி என்பனவற்றை திறந்து வைத்திருக்குமாறு, ஜனாதிபதி செயலாளரினால், மத்திய வங்கி ஆளுநருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஊடரங்கு சட்டம் அமுலாகும் காலப்பகுதியில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதமளவில்

இனவாத கொள்கையற்ற தமிழர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் – உதய கம்மன்பில.

இன்றும் சீரற்ற வானிலை