உள்நாடு

வங்காள விரிகுடா கடற்பரப்பில் தளம்பல் நிலை – மழை நிலைமை மேலும் வலுவடையும்

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, ஜனவரி 08 ஆம் திகதி முதல் நாட்டின் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.

ஊவா மாகாணத்திலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

கம்பஹா மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

editor

கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய NPP புத்தளம் பிரதேச சபை உறுப்பினருக்கு பிணை

editor