உள்நாடு

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே, வங்காள விரிகுடாவில் இன்று (29) அதிகாலை 12:11 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியே 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்தது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், இதுவரை உயிரிழப்புகள் அல்லது சொத்து சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.

இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரகோன் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.

இலங்கைக்கு தென்கிழக்கே சுமார் 260 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இலங்கையில் அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவாகியதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பின்னதிர்வுகள் இருந்தபோதிலும், இலங்கை மக்கள் இது தொடர்பாக தேவையற்ற பயத்திற்கு ஆளாக வேண்டாம் என தீபானி வீரகோன் அறிவுறுத்தினார்.

தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Related posts

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக மக்கள் சக்தி வாக்களிக்கும்

முன்னாள் அமைச்சர் மஹிந்தவின் இல்லம் பாடசாலைக்கு

editor

கன்சியூலர் பிரிவின் சேவைகள் இடைநிறுத்தம்