உள்நாடுகாலநிலை

வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி உருவாகும் – மீண்டும் ஒரு குழப்பநிலை

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தென்மேற்கு வங்காள விரிகுடாவின் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் மீண்டும் ஒரு குழப்பநிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இது புயலா, காற்றழுத்த தாழ்வு மண்டலமா என்பதைக் கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 9, 10, 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மறைமுக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் 9ஆம் திகதிக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரதமராகிறார் மஹிந்த ? தீவிரமாகும் கொழும்பு பாதுகாப்பு!

மேலும் ஆறு நாடுகளுக்கு இலங்கை தடை

கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 3.7 பில்லியன் டொலர் வருமானம் – அமைச்சர் விஜித ஹேரத்

editor