முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைவின் மறைவு குறித்து கூறுகையில்,
இது உண்மையில் எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு. குறிப்பாக கண்டிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் கூட. இத்தகைய அரசியல்வாதியின் இழப்பு பாரியதே.
எங்கள் அன்பான நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். ஒரு நல்ல நண்பர் என தெரிவித்துள்ளார்.