உள்நாடு

லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக இன்று முறைப்பாடு

(UTV | கொழும்பு) –   தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி முழந்தாளிட வைத்ததனால் , தற்போது பதவியை இழந்துள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவிலும் பொலிஸ் தலைமையகத்திலும் முறைப்பாடு இன்று பதிவு செய்யப்படவுள்ளது.

இன்று நண்பகலில் இந்த முறைப்பாட்டை செய்யவுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற தேசிய இயக்கத்தின் தலைவரான சுதேஷ் நந்திமால் கூறியுள்ளார்.

இதேவேளை, அநுதாரபுரம் சிறையில் இராஜாங்க அமைச்சரால் மிரட்டப்பட்ட தமிழ்க் கைதியின் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன் என்ற 33 வயது கைதியே இவ்வாறு துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடந்த 2009ஆம் ஆண்டில் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலை வேன் போக்குவரத்து – அரைவாசி கட்டணத்தை அறவிட தீர்மானம்

நந்தசேன செல்லஹேவா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்

editor

கண்டி மாடி கட்டட சரிவு – ஆராய்வுக்கு இன்று குழு கூடுகிறது