உள்நாடுபிராந்தியம்

லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – மூன்று பேர் பலி – நான்கு பேர் காயம்

குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், நால்வர் காயமடைந்தனர்.

இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேனும், எதிர்த்திசையில் பயணித்த லொறியும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தலாவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆறு பேர் வேனில் பயணித்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வேனில் பயணித்த மூவர் உயிரிழந்த நிலையில், தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது!

editor

வெடுக்குநாறி சிவராத்திரி சம்பவம்: 08 பேர் நீதிமன்றில் ஆஜர்

மரத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி

editor