உள்நாடு

லிட்ரோ கேஸ் விநியோகம் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறுஅறிவித்தல் வரை இவ்வாறு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தி உள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எரிவாயு வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொதுமக்களுக்கு 2 விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து, தீர்வுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 8 பேரடங்கிய குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பெலகே இதனை நேற்று அறிவித்திருந்தார்.

இதற்கமைய 0115811927 மற்றும் 0115811929 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காணாமல் போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது மீட்பு!

editor

காலி சிறைச்சாலையில் தீ விபத்து

editor

ரவி உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில்