உள்நாடுசூடான செய்திகள் 1

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) –

லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்  முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 795 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,707 ரூபாவாகும்.

12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும்.

இந்த விலை அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுப நேரத்தில் நாட்டை அநுரவிடம் கையளித்தும், அன்று வாக்குறுதியளித்த எதுவும் இன்றுவரை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச

editor

ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு கிடைத்த தண்டனை!!!

வெல்லம்பிடிய பகுதியில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ