உள்நாடுசூடான செய்திகள் 1

லசந்தவின் கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்ய ஜனவரி 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் பிரிவுக்கு சட்ட மா அதிபர் பிறப்பித்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சட்ட மா அதிபர் இன்று (13) கல்கிஸை நீதவான் நீதிமன்றத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக மேலும் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவித்து, ஜனவரி 7 ஆம் திகது சட்டமா அதிபர் இந்தக் கடிதத்தை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்பியிருந்தார்.

இருப்பினும், இந்தக் கடிதம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு இம்மாதம் 11 ஆம் திகதிசட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவித்திருந்தது, அதே நாளில், தொடர்புடைய கடிதத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சட்ட மா அதிபர் அறிவித்திருந்தார்.

கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்துக்கு இது தொடர்பில் தெரிவிக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான் சதுரிகா சில்வா, வழக்கை மே 30 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.

Related posts

கொரோனா தடுப்பூசி : எம்.பி’க்களுக்கு இன்று செலுத்தப்படும்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனம் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியது

editor

மத்ரஸா மாணவன் மரண சம்பவம் | சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை கைது செய்ய உத்தரவு!